28 மார்ச் 2013

இல்லாத காதலை நீட்டித்தல்

ஒரு பொய்யை மறைக்க
நிறைய பொய்ச்சொல்ல வேண்டியிருக்கிறது
முன்பு காதலிப்பதாக..
இப்போது கல்யாணம் முடிப்பதாக..

உலகைத் தொலைத்தவன்

நான்
உன்னையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்
எனக்குப் பின்னாலிருந்த உலகம்
தொலைந்துவிட்டது.

முடி தானம்

எந்த மொட்டுக்களும்
மலர வேண்டாம்
என்னவள்
மொட்டை அடித்துவிட்டாள்

மணமாகிப் போன தங்கச்சி...

எங்கள் தோட்டத்து பூக்களில் ஒன்றைப்
பறித்துக் கொடுத்தோம்
பிரிதுக்கொண்டுப் போனான்
நுகர்வானோ?
சிதைப்பானோ?
இன்னொருவனுடனான தங்கையின் இரவுகள்...

காதல் மலர்

கல்யாணத்திற்கும்
கருமாதிக்கும்
கற்சிலை சாமிக்கும்
கல்லறைக்கும்
மாலையாகும் ரோஜாக்கள்-
இன்னும்
காதலுக்கும் ஆகித்தொலைகின்றன...

அதிர்ந்தடங்குதல்

நீ என்னை கடந்து செல்கிறாய்
கல்லெறிப்பட்டத் தகரத்தைப் போல்
அதிர்ந்துக் கொண்டே இருக்கிறது
என் துருப்பிடித்த இதயம்.

நண்பேன்டா...

கொடுப்பது நீ என்றால்
விசத்தையும் குடித்துவிடுவேன்..
எடுப்பது நீ என்றால்
மனைவியையும் கொடுத்துவிடுவேன்..

27 மார்ச் 2013

வீணாய் போன நேரம்

என் நாட்களில்
வீணாய் போன நேரம்
எது தெரியுமா?
அது
உன்னை நினைக்காத நேரம்தான்...